>

நீல் ஆம்ஸ்ட்ராங் உடலை கடலில் அடக்கம் செய்ய முடிவு

புகழ் பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங்கின் உடலை கடலில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
நிலவில் முதன்முதலாக காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 25ம் திகதி தனது 82 வயதில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணியாற்றிய இவர், சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மரணம் இவரை தழுவியது.
இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட உலகின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது உடலை கடலில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
வரும் 13ம் திகதிக்கு பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது குறித்த விரிவான தகவல்களை தெரிவி்க்க மறுத்துவிட்டனர்.

 
-