தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறநகரில் உள்ளது சமூத் பிரகார்ன் முதலை பண்ணை.
பாங்காக் நகரைச் சேர்ந்த 36 வயது பெண் இந்த முதலை பண்ணையில் குதித்து முதலைக்கு இரையாகியுள்ளார்.
முதலை பண்ணை ஊழியர்களின் அஜாக்கிரதையால் தன் மனைவி முதலை பண்ணையில் தவறி விழுந்துள்ளார். எனவே பண்ணை நிர்வாகம் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பெண்ணின் கணவர் சுனாய் ஜிசாத்ரா தெரிவித்துள்ளார்.
ஆனால் பண்ணையில் உள்ள கண்காணிப்பு கமெராவில், அந்த பெண் தானாகவே குதித்து முதலை வாயில் சிக்கியுள்ளதாக படம் பதிவாகியுள்ளது.
தன் மனைவி பணப் பற்றாக்குறை காரணமாக வருத்தத்தில் இருந்தது உண்மை தான் என சுனாய் தெரிவித்துள்ளார்.