தமிழ்நாட்டில் ரஜினிக்கு அடுத்து யார் அந்த இடத்தை பிடிப்பார்கள் என்கிற போட்டி பல காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பார்த்தால் விஜய் தான் என்று இருக்கும். திடீரென பார்த்தால் அஜித் வந்து அந்த இடத்தில் உட்கார்ந்து இருப்பார். இப்பொழுது அந்த இடத்தை சூர்யா பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அஜித்தும் விஜய்யும் இன்னும் இருபது கோடியையே தொடாத பொழுது, சூர்யா முப்பது கோடியை தொட்டுவிட்டார். மாற்றான் படத்துக்கு அவரது சம்பளமாக 12 கோடியுடன் 15 கோடி மதிப்புள்ள தெலுங்கு உரிமையும் கொடுக்கப்பட்டது.. அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள லிங்குசாமியின் படத்துக்கு அவரின் சம்பளமாக 15 கோடியும் 15கோடி மதிப்புள்ள தெலுங்கு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஷங்கரின் படத்தில் சூர்யா நடிக்காமல் போனதற்கு தெலுங்கு உரிமையே காரணம் என அப்பொழுது செய்திகள் வந்தன.
இதுபற்றி லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸிடம் பேசியபோது அவர், சம்பளங்களை பற்றி எதுவும் தெரிவிக்க இயலாது எனவும் படம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.