>

தமிழ் சினிமா தகவல் நேரம்!!!


 

சிம்பு இன்னும் மன்மதன் 2க்கான திரைக்கதையை எழுதி முடிக்காததால் அந்தப் படம் இப்பொழுது ஆரம்பிக்கப்படாதாம். வாலு படத்தை தீபாவளிக்குள் முடிக்க முயற்சி நடைபெறுகிறது.

இயக்குனர் ஷங்கரின் “ஐ” படத்தை ஹிந்தியில் எடுக்கப்போவதாக வந்த வதந்திகளை மறுத்த படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு சீனா போவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

வயது ஆக ஆக கவர்ச்சி கூடும் நடிகை கஸ்தூரி தேரோடும் வீதியிலே என்னும் படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் ஒன்று போட்டு இருக்கிறார். இதனால் மீண்டும் தமிழில் ஒரு சுற்று வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயாவின் உண்மையான வயது 30ஆம். உடலை பேணுவதால் வயதைப் பற்றி அம்மணி கவலை படுவதில்லை. அதனால் இன்னும் திரை உலகில் கையில் பல படங்கள் உள்ளது.

நடிகை அமலா பால் அரசியலில் மறைமுகமாக குதித்துள்ளார். அவர் ஊழலுக்கு எதிரான அமைப்பான ஐந்தாம் படையில் இணைந்துள்ளார். அவர்களுக்கான விளம்பரத்திலும் நடிக்க உள்ளார்.

 
-