பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு வருவதில்லை என்கிறார் சோனியா அகர்வால்.
விஜய், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அவருக்கு சிறிய வேடங்கள் மட்டும் தேடி வருகிறது.
இதுபற்றி சோனியா அகர்வால் கூறுகையில், விவேக் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. இன்னும் ஒப்பந்தம் ஆகவில்லை.
எந்த படமாக இருந்தாலும் நான் நடிக்க தயார் என்று சொன்னது போல் எழுதுகிறார்கள். அது தவறு.
தற்போது 6 படங்களில் நடித்து வருகிறேன். இப்படங்கள் எல்லாம் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு தான் வந்தது.
பெரிய படங்கள், பெரிய கதாநாயகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் நல்ல படம், நல்ல கதாபாத்திரமா என்பதை தெரிவு செய்தே ஒப்புக்கொள்கிறேன்.
யாருடனுடம் ஜோடியாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் திரைக்கதை எனக்கு திருப்தியாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.