>

விமானநிலையத்தில் மயங்கிய நடிகை

‘ராட்டினம்’, ‘மன்னாரு’ படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.
இவர் தற்போது பாலசேகரன் இயக்கும் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ படத்தில், நடித்து வருகிறார்.
இதன் இறுதிக்கட்ட காட்சி சென்னையில் நேற்று முன்தினம் படமாக்க திட்டமிடப்பட்டது. அதற்காக திங்களன்று தனது அம்மாவுடன் திருச்சூரில் இருந்து கொச்சி வந்தார் ஸ்வாதி.
விமானநிலையத்தில் காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பதறிய அவர் அம்மா, தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்.
மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்வாதியின் அம்மா கூறுகையில், தற்போது உடல்நிலை தேறி வருகிறார் என்றும் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் எனவும் கூறினார்.
ஸ்வாதியின் உடல் நிலை காரணமாக அவர் இல்லாத காட்சியை படமாக்கி வருவதாக இயக்குனர் பாலசேகரன் தெரிவித்தார்.

 
-