>

ஆபத்தான வனப்பகுதியில் படமாக்கப்பட்ட 'மதில் மேல் பூனை'

பீனிக்ஸ் கிரியேசன்ஸ் சார்பில் திருப்பூர் கண்ணன் தயாரித்துள்ள படம் 'மதில் மேல் பூனை'.
இதில் நாயகனகாக விஜய் வசந்த், நாயகியாக 'நான்' பட நடிகை விபா நடித்துள்ளார்.
தவிர புதுமுகம் கார்த்திக், தம்பி ராமய்யா, முனைவர் ஞான சம்பந்தம், மீரா கிருஷ்ணான் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.
படம் குறித்து நாயகன் விஜய் வசந்த் கூறுகையில், முதலில் இது ஆக்ஷன் படம் என்றதும் நடிக்க தயங்கினேன். இயக்குனர் கொடுத்த தைரியத்தில் படத்தில் நடித்து முடித்தேன் என்றார்.
தயாரிப்பாளர் கண்ணன் கூறுகையில், கொலிவுட்டில் ஹிட் படங்களில் நடித்த விஜய் வசந்த் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்றும் பெரும்பாலான காட்சிகளை அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கியிருக்கிறோம் எனவும் கூறினார்.

 
-