>

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட முகமூடி

 
யுடிவி மோஷன் பிக்சர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான முகமூடி படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார். 
இதில் நாயகன் லீயாக ஜீவாவும், அறிமுக நாயகி பூஜா ஹெக்டேவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

வில்லன் கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். மேலும் படத்தில் நாசர், செல்வா, கிரீஸ் கர்னாட் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.

சமூகத்திற்காக சாகசம் செய்யும் சூப்பர் ஹீரோவின் கதையை முகமூடியில் சொல்லியிருக்கிறார் மிஸ்கின்.
வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றும் ஜீவா குங் பூ சண்டையில் அசத்துகிறார். நாயகி பூஜா ஹெக்டேவை கண்டதும் தடுமாறி காதலில் சாய்கிறார்.

கொலை, கொள்ளையில் ஈடுபடும் பயங்கர கும்பலைக் கட்டுபடுத்த முடியாமல்  பொலிஸ் கையை பிசைந்து நிற்கிறது.

இந்நிலையில் கொள்ளையரை கண்டுபிடிக்க நாயகி பூஜாவின் அப்பாவும், பொலிஸ் அதிகாரியுமான நாசர் களமிறங்குகிறார்.

இரவில் பூஜாவை சந்திக்க ஜீவா வரும் போது நாசரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். தன் அப்பாவை சுட்டது ஜீவா தான் என பூஜா தவறாக நினைக்கிறார்.

திடீர் திருப்பங்களுக்கு பிறகு அதிரடியாக, பொலிஸ் நண்பன் முகமூடியாக ஜீவா களமிறங்கி, வில்லன் நரேன் கும்பலுடன் மோதுகிறார். முகமூடி சூப்பர் கதாநாயகன் ஜீவா, வில்லன் நரேனை எப்படி வீழ்த்துக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

சூப்பர் மேன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக ஜீவா நடித்திருக்கிறார். இயல்பான தமிழ் சினிமா நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார்.
நாயகன் ஜீவா உடன் மோதும் காட்சிகளில் வில்லன் நரேன் மிரட்டுகிறார். பொருத்தமான பின்னணி இசை, கே இசையில் வரும் பாடல்கள், தொழில்நுட்பக்கலைஞர்களின் உழைப்பு மொத்தமும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. தனக்கே உரிய பாணியில் ஆக்ஸன் பொழுதுபோக்கு படமாக முகமூடியை மிஸ்கின் தந்துள்ளார்.

 
-