கொலிவுட்டில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகின்றார்.
முதன் முறையாக ஜெயம் ரவியுடன் அமலா பால் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
நிமிர்ந்து நில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சாலக்குடியில் சுமார் 12 நாட்கள் நடந்தன.
அதிலும் கோவாவில் கடற்கரையோரம் அழகிய மர வீடு கட்டி அதில் படப்பிடிப்பு நடத்தினர்.
அந்த வீட்டில் வைத்து ஜெயம் ரவி, அமலா பால் டூயட் படமாக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்க அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு திருப்பி ஆடினர்.
தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரவி தனது மனைவியுடன் கோவாவில் பொழுதைக் கழித்துவிட்டு வந்துள்ளார்.