
கொலிவுட்டில் கார்த்தி, அனுஷ்கா இருவரும் இணைந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்கள்.
சிங்கம் படத்தில் அண்ணன் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த அனுஷ்கா தற்போது அலெக்ஸ் பாண்டியன் படத்தில் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதற்கிடையில் நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்பிற்காக ரஷ்யா அருகிலுள்ள ஜார்ஜியா பறந்துவிட்டார்.
அங்கு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்த போது அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை.
இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவு்ககு போன் மேல் போன் செய்தனர்.
நீங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே சென்னைக்கு வந்தார்.
வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார். அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் 'பேட் பாய்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பப்படுகிறது.