>

திறம்பட புலமைப் பரிசில் எழுதிய மகள், மாரடைப்பால் இறந்த தகப்பன்!

கடந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மகள் மிகவும் திறம்பட எழுதி இருந்தார் என்பதை தொலைபேசி தொடர்பு மூலம் அறிந்து கொண்ட தகப்பன் ஒருவர் மகிழ்ச்சி தாங்க மாட்டாமல் மாரடைப்பால் உயிர் இழந்து உள்ளார்.
இவரின் பெயர் சமிண்ட சிறி லால் டி சில்வா. வயது 39. பிட்டிகல என்கிற இடத்தைச் சேர்ந்தவர். இவரின் உதேசி நேத்மினி. வயது 10.

பரீட்சையை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கின்றார் மகள். தகப்பன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு விபரம் கேட்டு இருக்கின்றார்.
மிகவும் அற்புதமான முறையில் திறம்பட பரீட்சை எழுதினார் என்று மகள் சொல்லி இருக்கின்றார். தகப்பன் திடீரென்று உரையாடலை நிறுத்தி விட்டார்.
சிறிது நேரம் கழித்து சில்வாவின் நண்பர் ஒருவரிடம் இருந்து அதிர்ச்சித் தொலைபேசி அழைப்பு வந்தது.

சில்வா மாரடைப்பால் பீடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்கிற தகவல் கிடைக்கப் பெற்றது.

சில்வா கடல் படை முன்னாள் வீரர் ஆவார். அத்துடன் அரசியல்வாதிகள் பலரினதும் மெய்க் காப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு இரு குழந்தைகள்.




 
-