>

யுத்த சூனிய வலயங்களில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றார் பஸில் ராஜபக்ஸ! விக்கிலீக்ஸ் அதிரடி


 

யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், அப்போதைய ஜனாதிபதி ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்தியவலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சருக்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்தத் தகவல்வெளியிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்தசந்திப்பு நடைபெற்றுள்ளது.

2009ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி இந்ததகவல் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சில வேளைகளில் யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், யுத்த சூன்ய வலயத்தில் தாக்குதல் நடத்தக்கூடாது என இராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
யுத்தம் தொடர்பான விவகாரங்களில்அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றமைக்காக பௌச்சர், இலங்கைஅரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள்பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவiயான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வலயத்திற்கு மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்லல், மனித உரிமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பசில் ராஜபக்ஷவிற்கும், பௌச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்த சூன்ய வலயத்தில் எந்தவிதமானஎறிகணைத் தாக்குதல்களும நடத்தப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்கராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத் தாக்குதல்நடாத்த வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல்வெளியிட்டுள்ளது.

 
-