இதனால் தென்னிந்தியாவிலிருந்து வாய்ப்பு தேடிச் செல்லும் நடிகைகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தான் அழகி வீணா மாலிக், பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மெஹரீன் சையத் என்ற மொடல் அழகியை இயக்குனர் சஞ்சய் புரன் சிங் அழைத்து வருகின்றார்.
இவர் லாகூர் என்ற படத்தை இயக்கியவர். அந்த படத்தில் மெஹரீனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால் லண்டனில் நடந்த பேஷன் விழாவில் பங்கேற்று கேட்வாக் போனபோது சறுக்கி விழுந்து மெஹரீனுக்கு அடிபட்டு விட்டது.
தற்போது தனது அடுத்த படத்தை தொடங்கும் சஞ்சய், இந்த முறை தவறாமல் மெஹரீனை புக் செய்து விட்டாராம்.
பாகிஸ்தானில் சூப்பர் மொடலாக வலம் வரும் மெஹரீன், இந்தப் படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.
இப்படம் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவி வரும் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட கொமெடிப் படமாகும் என்று சஞ்சய் கூறியுள்ளார்.