போடா போடி படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். வரலட்சுமி அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
போடா போடி படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிய நிலையில் தற்போதே நிறைவு பெறும் தருவாயை எட்டியுள்ளது.
க்ளைமேக்ஸ் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றது.
நடனத்தை மையமாக வைத்தே இப்படம் இயக்கப்படுவதால் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் நடனம் ரசிகர்களை மூழ்கடிக்கும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவா தெரிவித்திருக்கிறார்.
இந்த நடனக்காட்சியில் சிம்பு, நாயகி வரலட்சுமியுடன் பழைய நடிகை ஷோபனாவும் ஆட்டம் போட்டுள்ளார்.
வரும் 6ம் திகதி படத்தின் ட்ரைலரை வெளியிட்டு மிக விரைவில் சிம்பு ரசிகர்களுக்கு போடா போடி விருந்தாக அமைய உள்ளது.