>

பிரியாணி படத்தில் நடிக்க விரும்பாத ரிச்சா!


 

சகுனி நடிகரை வைத்து கோவா இயக்குனர் இயக்கவிருக்கும் அசைவ படத்திற்கு, சகுனி நடிகர் கால்ஷீட் ஒதுக்கி தராததால் அப்படத்தை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சகுனி நடிகர் போலீஸ் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால், இப்படத்திற்கு நேரம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக நடிகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் இப்படத்தில் சகுனி நடிகருக்கு ஜோடியாக ஒஸ்தியான நடிகை ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படத்தின் தாமதத்தால் தனக்கு வரும் ஒரு சில படவாய்ப்புகளையும் தட்டிக் கழிக்க வேண்டியுள்ளதால், இப்படத்திலிருந்து விலகிவிட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை விலகுவதற்கு முன்பே, வேறொரு நடிகையை தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழுவும் வேறொரு நடிகையில் தேடும் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறதாம்.

 
-