>

இரவு நேர படப்பிடிப்பா? அலறும் சமந்தா

தோல் நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவை டொக்டர்கள் இரவில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடாது என கூறியுள்ளார்கள்.
இதன் காரணமாக நடிகை சமந்தா இரவு நேர படப்பிடிப்புகளில் கலந்த கொள்ள பயம் கொள்கிறார்.

படப்பிடிப்பு முடிய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தன்னுடைய பணிகளை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

மேலும் அதிக வெயிலில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது என்றும் டொக்டர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த தோல் நோய்காரணமாகவே மணி ரத்னம் இயக்கும் கடல், ஷங்கரின் ஐ படங்களில் சமந்தா விலகினார் என்று கூறப்படுகின்றது.
தற்போது ஏ.எல். விஜய் இயக்கும் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்தில் சமந்தாவை நாயகியாக்க முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றது.
இந்த முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 
-