>

சட்டம் ஒரு இருட்டறையில் நான் தான் கதாநாயகி: பியா

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் பிந்து மாதவி, ரம்யா கிருஷ்ணன் நடித்தாலும் நான் தான் கதாநாயகி என்கிறார் பியா.

கோ படத்துக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்து வருகிறார் பியா.

இது குறித்து பியா கூறுகையில், தமிழில் நான் நடித்த படங்களில் எல்லாமே கவர்ச்சி வேடமாக அமைந்து விட்டது. இதனால் எனக்கு கவர்ச்சி இமேஜ் வந்து விட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கும் நான் கவர்ச்சி உடையில் செல்வதாக சொல்கிறார்கள். நான் மும்பை கலாச்சாரத்தில் வளர்ந்தவள்.
கவர்ச்சியான உடையும், வாழ்க்கையும், சினிமாவும் எனக்கு சகஜமானது. இது மற்றவர்கள் கண்ணுக்கு தவறாக தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும். கவர்ச்சி நடிகை என்று என்னை குறிப்பிட்டால் சந்தோஷம்தான்.
சட்டம் ஒரு இருட்டறையில் ரம்யாகிருஷ்ணன், பிந்து மாதவியுடன் நடித்தாலும் நான் தான் கதாநாயகி. எனக்குத் தான் நாயகனுடன் 3 டூயட் பாட்டு இருக்கிறது. அப்படியென்றால் நான்தானே கதாநாயகி.

இந்தப் படத்திலும் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். கோ படத்துக்கு பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் இந்திப் படத்துக்கு போய்விட்டேன். அதனால் நடிக்க முடியவில்லை.

தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும் தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இனி தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

 
-