>

எனக்கு தோல் அரிப்பா? வருத்தத்தில் சமந்தா

 படப்பிடிப்புக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை பாதித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சமந்தா.

பாணா காத்தாடி, நான் ஈ படங்களில் நடித்திருப்பவர் சமந்தா.
தோல் நோய் பாதிப்பால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வில் இருந்தார். இதனால் ஷங்கர், வெங்கட் பிரபு படங்களில் நடிக்க முடியாமல் போனது.

இது பற்றி அவர் கூறுகையில், படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்ல இருந்தேன். அதற்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் பாதிப்பு ஏற்பட்டது, தோலில் அரிப்பு ஏற்பட்டது என்றெல்லாம் என்னைப் பற்றி வதந்திகள் வந்ததை கண்டு வருத்தம் அடைந்தேன்.

தொற்று ஏற்பட்டதால் இப்படி ஆனது. தற்போது குணம் அடைந்து விட்டேன். மீண்டும் நடிக்க வந்த போது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என் பட இயக்குனர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

மணிரத்னம், ஷங்கர், வெங்கட்பிரபு படங்களில் நடிக்க முடியாமல் போனது பற்றி கேட்கிறார்கள். அது கடந்துபோன விஷயம். அதுபற்றி தொடர்ந்து பேச விரும்பவில்லை.
வரும் அக்டோபர் முதல் நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.

 
-