திரையுலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் தாயார் தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.
அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார்.
அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.
அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர்.