>

முகமூடி-2ம் பாகத்தை 3Dல் தயாரிக்க திட்டம்


 

ுகமூடி படத்தின் 2ம் பாகத்தை 3D தொழில் நுட்பத்தில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக யு.டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து இருக்கும் 'முகமூடி' படம் நாளை திரைக்கு வருகின்றது.

பூஜா ஹெக்டே, நரேன், நாசர் நடித்துள்ள இப்படம் மிஷ்கினுக்கு திரையுலகில் புது அந்தஸ்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தயாரித்துள்ளது யு.டிவி நிறுவனத்தின் தனஞ்செயன், முகமூடி படத்தின் இறுதி வடிவத்தினை பார்த்தேன்.

மொத்த படக்குழுவும் நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் கே அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றார்.

ஜீவாவிற்கும் நரேன்னிற்கும் பாராட்டுக்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் முகமூடி படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறோம். அதாவது 3Dல் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

 
-