வாலு, போடா போடி மற்றும் வேட்டை மன்னன் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் சிம்பு.
இவர், தன்னுடைய படமான 'வாலு' நகைச்சுவை படம் என்பதால், அதற்காக கொமெடி சென்ஸை ரஜினி படங்களை பார்த்து கற்று கொள்கிறாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை, குரு சிஷ்யன் ஆகிய படங்களில் ரஜினி சாரின் நகைச்சுவை பிரமாதமாக இருக்கும், அவரை போல எந்த கதாநாயகனும் நகைச்சுவையில் அசத்தியதில்லை.
தற்போது நான் நடித்து வரும் 'வாலு' படம் கூட நகைச்சுவை படம் தான், இந்த தடவையும் சந்தானம் கூட்டணி அசத்தும் என்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் என்பதால் ரஜினி சாரின் பழைய படங்களிலிருந்து கொமெடி சென்ஸை கற்று வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.