இவர் கொமெடியன் என்பதை விட, கதையின் நாயகன் என்கிற அடையாளத்தையே விரும்புகிறார்.
தற்போது கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும், ரகளபுரம் விரைவில், திரைக்கு வரவுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை அங்கனாராய் நடித்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, ரேகா, டெல்லி கணேஷ், மனோபாலா, ஷகிலா ஆகிய நட்சத்திரப் பட்டாளமும் உள்ளது.
தொடர்ந்து புதுமுகங்களை ஜோடியா போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, கொமெடியனா இருந்த நான், சில படங்களில் நாயகனா நடிச்சேன்.
அந்த படங்கள் நன்றாக ஓடினாலும், நானொரு கொமெடியன். இதனால், கதாநாயகிகள் யாருமே என்னைக் கண்டுக்க மாட்டேங்கறாங்க.
அதனால், எனக்கு ஏற்றவர்களை ஜோடியாப் போடுறேன் என்றும் கவலைய மறந்து சிரிக்கணும்கறதுக்காகவே கலகலப்பான கதையை தேர்ந்தெடுத்திருக்கோம் எனவும் கூறியுள்ளார்.