>

கிளாமராக நடிக்க தயார்: ஸ்வாதி

சினிமாவில் கிளாமராக நடிக்க தயாராக உள்ளதாக நடிகை ஸ்வாதி கூறியுள்ளார்.

கொலிவுட்டில் சுப்ரமணியபுரம், போராளி படங்களில் நடித்தவர் ஸ்வாதி.
இருப்பினும் கொலிவுட்டை பொறுத்தவரை ஸ்வாதிக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வில்லை.

இதனால் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகின்றார்.
மலையாளத்தில் ஆமென் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்வாதி.

இப்படம் பழங்கால தேவாலயங்களின் அருகில் வாழும் மக்களைப்பற்றிய கதை ஆகும். இப்படத்தில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரம் மிகவும் வித்தியாசமானது என தெரிவித்திருக்கிறார் ஸ்வாதி.

அதே சமயத்தில் தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் உருவாகும் படங்களில் அதிகமான அளவில் நாயகிகள் வருகை தருவதால் போட்டிகள் நிலவுகின்றது. இதன் காரணமாக கிளாமராக நடிக்க முடிவு செய்ய வில்லை.
சினிமாவில் கிளாமரும் ஒரு அங்கம் என்பதாலேயே இவ்வாறு நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

மேலும் தமிழில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 
-