கோ படத்திற்கு பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் நடிகை பியா பாலிவுட்டிற்கு சென்றார்.
பாலிவுட்டில் தான் ஒப்பந்தமான படங்களை முடித்து விட்டு தற்போது சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்து வருகின்றார்.
மேலும் தற்போது தெலுங்கில் தளம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் நக்சலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது.
பியா, நக்சலைட் கிராமத்து பெண்ணாக வருகின்றார். இது தவிர கன்னட மொழியில் உருவாகும் படத்திலும் நடித்து வருகின்றார்.
மேலும் தமிழில் கிராமத்து பெண்ணாக நடிக்க ஆசைப்படுவதாகவும் பியா தெரிவித்துள்ளார்.